உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி

பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் அக்., 24ம் தேதி வரை, தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நீர்வளத்துறை அதிகாரிகள், தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பினர். ஜூன் 1ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகள் காத்திருந்தனர்.இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் அக்., 24ம் தேதி வரை, தொடர்ந்து, 136 நாட்களுக்கு, 1,020 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க, அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி