மேலும் செய்திகள்
உடைந்த கழிவுநீர் கால்வாய் சாலையில் 'மெகா' பள்ளம்
01-Feb-2025
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும்,' என பா.ஜ., சார்பில், மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி பா.ஜ., கிளை தலைவர் கோகுல்கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 23வது வார்டில் நீண்ட நாட்களாக ரோடு பழுதடைந்துள்ளது. வி.கே.வி., லே - அவுட்டில், தண்ணீர் தொட்டிக்கு கிழக்கு பகுதியில், மெயின் ரோட்டில் குடிநீர் வினியோகம் செய்யும் போது, கடந்தாண்டு நீர் கசிவு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.சாய்பாபா கோவிலுக்கு எதிரில் உள்ள ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவாரி கார்டனுக்கு செல்லும் நுழைவுவாயில் அருகே ரோட்டில் பள்ளம் மற்றும் பாதாள சாக்கடை குழியின் மூடி பழுதடைந்துள்ளது.வருமான வரி அலுவலகத்துக்கு முன்பாக பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு, நீர் கசிந்து வருகிறது.போலீஸ் திருமண மண்டபம் எதிரில் பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த ரோடுகளில் உள்ள குழிகளால், தினமும் விபத்துகள் ஏற்படுகிறது; வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே, பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்கவும், ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
01-Feb-2025