மேலும் செய்திகள்
அரசு கலை கல்லுாரியில் ரத்ததான முகாம்
06-Aug-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், தலைமை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மாரிமுத்து, தலைமை வகித்தார்.தொடர்ந்து, கல்லுாரி ரெட் கிராஸ் மாணவர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பலர், ரத்ததானம் செய்தனர். சேகரம் செய்யப்பட்ட ரத்தம், அறுவை சிகிச்சை மற்றும் விபத்தில் காயமடைந்த நோயாளிகள் நலன் கருதி அரசு மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, செவிலியர்கள் அன்னக்கொடி, அனுராதா, திலகமணி, ஆய்வக நிபுணர் மகாலட்சுமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Aug-2024