உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.பி.ஜி., டிராபி விளையாட்டு போட்டி: அரசு கலைக் கல்லுாரி அணி அபாரம்

பி.பி.ஜி., டிராபி விளையாட்டு போட்டி: அரசு கலைக் கல்லுாரி அணி அபாரம்

கோவை : சரவணம்பட்டி, பி.பி.ஜி., வணிக கல்லுாரியில், 'பி.பி.ஜி., டிராபி' விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடந்தன.பி.பி.ஜி., குழும நிறுவனங்களின் துணை தலைவர் அக்ஷய், பி.பி.ஜி., வணிக கல்லுாரி இயக்குனர் வித்யா ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர். மாணவர்களுக்கான, கோ கோ அரை இறுதியில், கே.ஜி., கல்லுாரி அணி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா அணியை, 15-1 என்ற புள்ளி கணக்கிலும், இரண்டாம் அரை இறுதியில், சங்கரா கல்லுாரி அணி, பாரதியார் பல்கலை அணியை, 19-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.இறுதி போட்டியில் விளையாடிய கே.ஜி., கல்லுாரி அணி, பாரதியார் பல்கலை அணியை, 18-10 என்ற புள்ளி கணக்கில் வென்று, முதலிடம் பிடித்தது. சங்கரா கல்லுாரி அணி, 11-5 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.மாணவியருக்கான 'த்ரோ பால்' அரையிறுதி போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, கோவை அரசு கலை கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது. இரண்டாம் அரை இறுதியில், கே.ஜி., கல்லுாரி அணி, கோவை கலைமகள் கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.இறுதி போட்டியில், எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி, கே.ஜி., கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது. கோவை அரசு கலைக் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கோவை கலைமகள் கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.மாணவியருக்கான வாலிபால் அரையிறுதி போட்டியில், கே.ஜி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஏ.வி.பி., கல்லுாரி அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாம் அரை இறுதியில், நிர்மலா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.ஜி., ஐ.எஸ்.எல்., அணியை வென்றது.இறுதிப்போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.ஜி., கல்லுாரியை வென்று, முதலிடம் பிடித்தது. கே.ஜி., ஐ.எஸ்.எல்., அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஏ.வி.பி., கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, பி.பி.ஜி., குழும நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை