உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் டிரைவர் விடுதியில் தற்கொலை

பஸ் டிரைவர் விடுதியில் தற்கொலை

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், அரசு பஸ் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஊட்டியை சேர்ந்தவர் நவீன், 39, தமிழக அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளையில், டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஒரு வருடமாக வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, ஊட்டியில் இருந்து கிளம்பினார். பின், அவர் மேட்டுப்பாளையம் வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.இதனிடையே நேற்று முன் தினம் அவரது அறை திறக்காமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்த போது, நவீன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை