உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வில் சென்டம் ஆரிசன் மாணவர்கள் அசத்தல்

பொதுத்தேர்வில் சென்டம் ஆரிசன் மாணவர்கள் அசத்தல்

கோவை;ஈச்சனாரி ஆரிசன் அகாடமி பள்ளியில் படித்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வில் காவ்யா, ஷாயா ஆகியோர் 500க்கு 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அகிலேஷ் 483, தீபேஷ் 481 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் மொழிப்பாடத்தில் ஒன்பது மாணவர்கள், கணிதத்தில் நான்கு மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு பெற்றுள்ளனர். 30 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வில் சரவணகங்கேஸ்வர் 489, அபிவன் 473, சஞ்சய், கவிந்தரா ஆகியோர் 469 பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளியில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும், சி.ஏ., அடிப்படை தேர்வு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி அறங்காவலர் பழனிசாமி, நிர்வாகிகள் திவ்யா, விகாசினி பள்ளி முதல்வர் பொன்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்