உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை: தண்டவாள பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சேலம் கோட்ட ரயில்வேயின் பல்வேறு பகுதிகளில், தண்டவாள பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடக்க உள்ளன. இதற்கு வசதியாக, நாளை, 12, 15 ம் தேதிகளில், இரு ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஆலப்புழாவில் இருந்து காலை 6:00 புறப்படும் ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில், போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வராது. அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வராது. இவ்விரு ரயில்களும் போத்தனுாரில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை