உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

வத்திராயிருப்பு : மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு, நாளை முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இக்கோவிலில் நாளை பிரதோஷம், 21ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதை முன்னிட்டு, நாளை முதல் ஜூலை 22 வரை நான்கு நாட்கள், தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனு மதிக்கப்பட உள்ளனர்.எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வருவதை தவிர்க்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ