உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணத்தை கொடுக்காமல் அமுக்கியவர்களுக்கு செக்

பணத்தை கொடுக்காமல் அமுக்கியவர்களுக்கு செக்

சூலுார்:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பூத் செலவுக்கு கொடுத்த பணத்தை, செலவழிக்காமல் ஆட்டைய போட்ட கட்சி நிர்வாகிகளை கண்டு பிடிக்க பிரதான கட்சிகள் முடிவு செய்துள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., சார்பில், பூத் செலவுக்கு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு பூத்துக்கும் வழங்கப்பட்டது. சில இடங்களில் கொடுத்த பணத்தில் பாதியை ஆட்டைய போட்டுவிட்டு, மீதி பணத்தை பூத்களுக்கு நிர்வாகிகள் கொடுத்துள்ளதாகவும், சில இடங்களில் மொத்த பணத்தையும் அமுக்கி கொண்டதாகவும் பல புகார்கள் எழுந்தன. இதனால், தேர்தல் நாளன்று பல பூத்களில் கட்சி தொண்டர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த கட்சிகளின் மேலிடம், கொடுத்த பணத்தை கொடுக்காமல் அமுக்கிய நிர்வாகிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க குழுவை அமைந்துள்ளன. இதனால், கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ