உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியண்ணன்புதூர் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா நிகழ்ச்சி கடந்த ஏப்., 28ம் தேதி, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.ஏப்., 29ம் தேதி, திருஆபரண பெட்டி மற்றும் சக்தி கலசம் அழைத்து வருதல் நடந்தது. 30ம் தேதி, சுவாமிக்கு மாவிளக்கு வழிபாடும், தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.அன்று மதியம், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, சக்தி கலசம் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1ம் தேதி, காலை, மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.கடந்த, 2ம் தேதி, காலை, மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமி திரு வீதி உலா நடந்தது. நேற்று, 3ம் தேதி, காலை, சுவாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் திருஆபரண பெட்டி ஊர் கவுண்டர் தோட்டம் சேருதல் நிகழ்ச்சியுடன், சித்திரரை திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ