உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

புகையிலை பறிமுதல்

ஆர்.எஸ்., புரம் போலீசார் பி.என்., புதுாரில் ரோந்து சென்றனர். அப்போது, முல்லை நகர் அருகே ஸ்ரீநகரில் உள்ள காலியிடத்தில் சந்தேகத்துக்கு இடமாக, இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த ஜீவானந்தம்,30, என்பவரை பிடித்து விசாரித்தனர்.வாகனத்தை சோதனையிட்டபோது, தடைசெய்யப்பட்ட, 5 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு மொபைல்போன்கள், இரு சக்கர வாகனம், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஜீவானந்தத்தை சிறையில் அடைத்தனர்.

100 கிராம் கஞ்சா

வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு நேற்று முன்தினம் சாமி ஐயர் புதிய வீதி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், சொக்கம்புதுார் ரோட்டை சேர்ந்த சுபாஷினி,36, என்பவரை பிடித்து சோதனையிட்டபோது, 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி