உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரி மைதானத்தில் துாய்மை பணிகள் தீவிரம்

அரசு கல்லுாரி மைதானத்தில் துாய்மை பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரி மைதானத்தை, பொள்ளாச்சி தடகள சங்கம், தமிழ்நாடு கலாசார அறக்கட்டளை சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் விளையாட்டுத்திறமையை மேம்படுத்த போதிய மைதான வசதியில்லை. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மினி ஸ்டேடியம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.போதிய மைதானம் இல்லாததால், பயிற்சி எடுப்பதில் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில், அரசு கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி தடகள சங்கம், தமிழ்நாடு கலாசார அறக்கட்டளை சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.தடகள சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில் மைதான வசதியில்லாததால், மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. அரசு கல்லுாரி மாணவர்களும், பல்கலை அளவிலான போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், பல்கலை அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறும் வகையில், மைதானம் சீரமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக அங்கு இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை