உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்துணவு கூடங்களில் துாய்மை பணி தீவிரம்

சத்துணவு கூடங்களில் துாய்மை பணி தீவிரம்

சூலுார்:பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, சத்துணவு கூடங்களை துாய்மை படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், வரும், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி வளாகங்கள் துாய்மை படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சூலுார் வட்டாரத்தில் சத்துணவு கூடங்களை துாய்மை படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்றியத்தில், 47 துவக்கப்பள்ளிகள், 21 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் எட்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்குள்ள சத்துணவு தயாரிக்கும் கூடங்களை துாய்மை படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சமையல் கூடங்களில் வெள்ளை அடித்தல், உணவு தானியங்களை பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பி.டி.ஓ., சியாமளா , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சண்முக சுந்தரம் ஆகியோர் சத்துணவு கூடங்களை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை