உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாடலை கட்டுப்படுத்தும் கோகோகான் கலவை

வாடலை கட்டுப்படுத்தும் கோகோகான் கலவை

உடுமலை : தென்னை மரங்களில், வாடல் நோயை கட்டுப்படுத்த, வேளாண் பல்கலை., யின், கோகோகான் தாய் கலவையை பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இக்கலவையை பயன்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:கோகோகான் தாய் கலவையை நேரடியாக மரத்திற்கு பயன் படுத்தக்கூடாது. 200 லிட்டர் தண்ணீர் டேங்கில்,10 கிலோ நாட்டு சர்க்கரை, 5 லிட்டர் தயிர், சமையல் உப்பு ஆகியவற்றை, 150 லிட்டர் நீரில் நன்கு கலக்க வேண்டும். பின்னர், கோகோகான் தாய் கலவையை சேர்த்து, சுத்தமான மூங்கில் கம்பு கொண்டு, 10 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும்.இதனை, சாக்கு பையினால் மூடி, நிழல் பாங்கான இடத்தில், 5 முதல், 7 நாட்கள் வளர்க்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையிலிருந்து, 2 லிட்டர் எடுத்து, அதனுடன் 8 லிட்டர் தண்ணீர் சேர்த்து, வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு வட்டப்பாத்தியில் ஊற்ற வேண்டும்.இம்முறையை, இரண்டு, மூன்று மாத இடைவெளியில், தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். இதில் மீதமுள்ள கரைசலை தாய்க்கரைசலாக கொண்டு, மீண்டும், மீண்டும் விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ளலாம்.இக்கலவையை பயன்படுத்துவதால், வாடல் நோயை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை