தீ விபத்தில் காயர் பித் சேதம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, 'காயர் பித்' திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆனைமலை காளியாபுரத்தில், ராஜராஜேஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் உலர வைக்கப்பட்டிருந்த 'காயர் பித்' திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த, பொதுமக்கள் உள்ளிட்டோர் தீயை அணைக்க முற்பட்டனர்.இது குறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் கணபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, உடனடியாக தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கால்வாய் சுத்தம் செய்து எடுக்கப்பட்ட குப்பைக்கு மர்ம நபர்கள் வைத்த தீயால், 'காயர் பித்' பரப்பியிருந்த இடத்தில் தீ பரவி இருக்கலாம், என, கூறப்படுகிறது.