உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எச்டி., படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு

பி.எச்டி., படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு

பொள்ளாச்சி:பாரதியார் பல்கலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளிலும், ஆராய்ச்சிநிறுவனங்களிலும் 2024-25 கல்வியாண்டு பி.எச்டி., முழுநேரம் பகுதி நேரம் படிப்பதற்கான, பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வு ஜூன் 22ம் தேதி காலை, 11:00 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், ஜூன் 2ம் தேதிக்குள் பல்கலை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர்., தரப்பில் நெட்., செட்., கேட்., எம்.பில்., டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள், விமானப்படை கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட தகுதிகள் பெற்றவர்கள், நுழைவுத்தேர்வு எழுத அவசியமில்லை. விபரங்களுக்கு பல்கலை இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை