உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கதேச சம்பவத்துக்கு கண்டனம்

வங்கதேச சம்பவத்துக்கு கண்டனம்

போத்தனூர்: வங்கதேச கலவரத்தில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு, விஸ்வகர்ம ஜகத்குரு சிவசண்முகசுந்தரபாபு சுவாமி, கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசண்முகசுந்தரபாபு சுவாமியின் அறிக்கை: வங்கதேசத்தில் தற்போது நடக்கும் கலவரத்தால், சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஹிந்து கோவில்கள், பெரியவர்கள் மீது வன்முறையாளர்கள் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை, விஸ்வபாரத் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, ஹிந்துக்களுக்கும், கோவில்களுக்கும், மத தலைவர்களுக்கும், உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி