போத்தனுார் பகுதியில் 257 சிலைகள் பிரதிஷ்டை
போத்தனூர் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நேற்று புறநகரில், 257 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போத்தனூர், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 116, குனியமுத்தூரில், 40, மதுக்கரையில், 52, செட்டிபாளையத்தில், 26 மற்றும் க.க.சாவடியில், 23 என மொத்தம், 257 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.அதிகாலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சிலைகள் அனைத்தும், நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குறிச்சி குளம், வாளையார் அணையில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போலீசார், வருவாய் துறையினர் இணைந்து செய்துள்ளனர்.