உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதியில் கட்டுமான பணி; இழப்பீடு வழங்க உத்தரவு 

பாதியில் கட்டுமான பணி; இழப்பீடு வழங்க உத்தரவு 

கோவை: கட்டுமான பணியை பாதியில் நிறுத்தியதால், ஒப்பந்ததாரர் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை அருகேயுள்ள வீரகேரளம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வீடு கட்டுவதற்காக, கட்டட ஒப்பந்ததாரர் காளிதாசன் என்பரை சந்தித்து பேசினார். வீடு கட்ட, 16 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, 2023 ஜூன் 7ல் ஒப்பந்தம் செய்தனர். முன்தொகை நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், கட்டுமான பணியை பாதியில் நிறுத்தி விட்டு ஒப்பந்ததாரர் சென்று விட்டார். மொத்தம், 2.42 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே, கட்டுமான பணி செய்திருந்தது தெரியவந்தது. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலசுப்பிரமணியம் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'கட்டுமான பணியில் சேவை குறைபாடு செய்த ஒப்பந்ததாரர், 1.57 லட்சம் ரூபாய் திரும்ப வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி