மேலும் செய்திகள்
வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு
19-Feb-2025
கோவை; கோவை வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சங்க அரங்கில் நேற்று நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: புதிய சட்ட திருத்த மசோதா, வழக்கறிஞர்களுக்கு எதிராக உள்ளதால், அவற்றை திரும்ப பெற மத்திய அரசை கேட்டுக்கொள்வது, இதை வலியுறுத்தி வரும் 24ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என, ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. புதிய சட்டத்திற்கு எதிராக, அன்றைய தினம், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
19-Feb-2025