உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பள்ளிகள் 88.12 சதவீதம் தேர்ச்சி

மாநகராட்சி பள்ளிகள் 88.12 சதவீதம் தேர்ச்சி

கோவை;கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 17 மேல்நிலை மற்றும் 10 உயர்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் இருந்து, 814 மாணவர்கள், 1,189 மாணவியர் என, 2,003 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், 655 மாணவர்கள், 1,110 மாணவியர் என, 1,765 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் தேர்ச்சி சதவீதம், 80.47, மாணவியர் தேர்ச்சி சதவீதம், 93.36 என, மொத்தம், 88.12 தேர்ச்சி சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு, 87.57 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இதில், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதுார் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வரதராஜ புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ