மேலும் செய்திகள்
மதுபான கடையில் ரூ. 5 லட்சம் திருட்டு
15-Aug-2024
சூலூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருட முயன்ற நபர், மின்சாரம் தாக்கி பலியானார்.சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்குள் நேற்று அதிகாலை திருட்டு கும்பல் ஒன்று நுழைந்தது. அங்கிருந்த இரும்பு ராடுகளை திருட முயன்ற போது, மின் கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. அதில் மின்சாரம் தாக்கி ஒரு நபர் சம்பவ இடத்தில் மயங்கினார். அந்நபரை மீட்ட அக்கும்பல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த போன நபர், சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்தி, 27 என்பதும், தனது தம்பி சரவணன், முத்து உள்ளிட்ட ஆறு பேருடன் திருட வந்ததும், அங்கு மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அண்ணா நகர் பகுதியில் ரோந்து வந்த போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பெயர் ஜகா பரிதா, 29, எனவும், அவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜகா பரிதா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுபான கடையில் திருடிய இருவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் மதுபான கடையில் திருடிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 9.80 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் எப்.எல்., 2 மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பணத்தை சிலர் திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., மகாராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுபான கடையில் திருடியவர்கள் சிவகங்கை மாவட்டம், திருபுவனம், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், 24, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 24, என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 9.80 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
15-Aug-2024