உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய ஹாக்கியில் சி.எஸ்.ஐ., ஆதிக்கம்

குறுமைய ஹாக்கியில் சி.எஸ்.ஐ., ஆதிக்கம்

கோவை : பள்ளிக்கல்வித்துறையின் குறுமைய அளவிலான ஹாக்கி போட்டியில் மாணவியர் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனர். கோவை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் கோவையில் நடக்கிறது. 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட ஹாக்கி போட்டி கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி சார்பில் நேற்று ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது. மாணவர் - மாணவியர் பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. மாணவியர் 14 வயது பிரிவில் சி.எஸ்.ஐ., பள்ளி முதலிடம், அல்வேர்னியா பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் சி.எஸ்.ஐ., முதலிடம், நிர்மலா மெட்ரிக்., இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் சி.எஸ்.ஐ., முதலிடம், சி.எம்.எஸ்., இரண்டாமிடம் பிடித்தன. மாணவர் 14 வயது பிரிவில் சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி முதலிடம், இளங்கோ பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் இளங்கோ முதலிடம், சி.எம்.எஸ்., இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் ஸ்டேன்ஸ் முதலிடம், சி.எம்.எஸ்., இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை