உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையில் குட்டீஸ் சினிமா... கண்டுகளிக்க இனி நேரம் வருமா!

கோடையில் குட்டீஸ் சினிமா... கண்டுகளிக்க இனி நேரம் வருமா!

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில், குட்டீசை கவர, எக்கச்சக்க சினிமாக்கள் வெளியாகி வருகின்றன.கோடை விடுமுறையில், உறவினர் வீடுகளுக்கு செல்வது, நகரத்திற்கு குடிவந்தவர்கள் சொந்த ஊருக்கு குழந்தைகளை அனுப்புவது, அவுட்டிங் செல்வது என பல திட்டமிடல்கள் இருக்கும்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில்,கோடை விடுமுறை முடிவதற்குள், குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர்.சம்மர் கோச்சிங் வகுப்புக்கு அனுப்பினாலும், மற்ற நேரங்களில், என்ன செய்வதென்ற தெரியாமல், எப்போது பள்ளி திறக்கும் என்ற மனநிலைக்கு சென்றுவிடுவர். ஆனால், குழந்தைகளின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக மாற்ற முடியும்.

அதற்கான 'டிப்ஸ்' இதோ!

n சொந்த வீடு, வாடகை வீடு என எங்கு வசித்தாலும், செடி வளர்ப்பதில் சிக்கல் இருக்காது. பால்கனி, ஜன்னல்கள், வீட்டின் முன்பு கூட, தொட்டி கட்டி, செடி வளர்க்கலாம். வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை வாங்கி கொடுத்து, அதற்கு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பு வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைத்து விடுங்கள். அதோடு நேரத்தை செலவிட ஆரம்பித்துவிடுவர்.n இடவசதி இல்லாத வீடுகளில் கூட, மீன்கள் வாங்கி வளர்க்க முடியும். ஒரு பவுலில் குட்டி மீன் வாங்கி கொடுத்தால் போதும். குறைந்த செலவில், அவர்களுக்கான சிறந்த பொழுதுபோக்காக, மீன் வளர்ப்பது மாறிவிடும்.n புத்தகங்களை வாசிக்க கொடுக்கலாம். ஒரு புத்தகத்தை கொடுத்து, அதிலுள்ள புதிய வார்த்தைகளை எழுதுவது, கதை சொல்வது என டாஸ்க் கொடுத்துவிட்டால், வாசிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வர். புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால், வீட்டையே நுாலகமாக்கிவிடுவர்.n தொலைக்காட்சிகளில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வெகு குறைவு. இதிலும், குட்டீஸ்களுக்கான சேனல்களில், 'பேன்டசி' சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பப்படுகிறது. இதில் இருந்து விலகி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படங்களை வழங்குகின்றன ஓடிடி தளங்கள்.குறிப்பாக, நெட்பிளிக்ஸில் 'வுட்டி-வுட்பெக்கர் கோஸ் டூ கேம்ப்', 'ஹோட்டல் டிரான்ஸில்வானியா', 'தி மேஸ் ரன்னர்' போன்ற படங்களும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், 'விஸ்', 'விம்பி கிட்ஸ்', 'தி நாட்டி நைன்', 'தி சவுண்ட் ஆப் மியூசிக்'போன்ற படங்களும் ஸ்ட்ரீமிங் லிஸ்ட்டில் உள்ளன.இதுபோன்ற திரைப்படங்கள், குழந்தைகளின் கற்பனை திறனை அதிகரிக்க செய்யும். கோடை விடுமுறையில், நல்ல சினிமாக்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ