உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேனி சேந்தன் ஸ்கொயர்ஸ் வணிக வளாக பூமி பூஜை

டேனி சேந்தன் ஸ்கொயர்ஸ் வணிக வளாக பூமி பூஜை

கோவை;டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வில்லாக்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றை சிறந்த தரத்துடன் உருவாக்கியுள்ளது.அந்தவரிசையில் தற்போது, பீளமேடு, அவிநாசி ரோடு, சாந்தி தியேட்டர் பின்புறம், 'டேனி சேந்தன் ஸ்கொயர்ஸ்' என்ற வணிகவளாகத்தை அமைக்கவுள்ளது.இதற்கான பூமி பூஜையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ரத்னகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி நல்லாசி வழங்கி, துவக்கி வைத்தனர்.டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவராமன் கந்தசாமி கூறுகையில், ''கோவையின் பிரதான பகுதியில் அமையவிருக்கும் இந்த வணிக வளாகம் அனைத்து முக்கிய அம்சங்களுடன், தரமான கட்டுமானத்தில் நிறுவப்படவுள்ளது. புதிதாக தொழில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும், தொழிலை விரிவுப்படுத்துவோருக்கும் இந்த வணிக வளாகம் மிகச்சிறந்ததாக அமையும்'' என்றார்.மேலும் விபரங்களுக்கு, 87540 23949 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை