உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை;மின்கட்டண உயர்வைக் கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு அரசு சமீபத்தில் மின்கட்டண உயர்வை அறிவித்தது. இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இ. கம்யூ., கோவை டாட்டாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இ.கம்யூ., மாநிலப் பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மாவட்ட துணை செயலாளர்கள் ஜேம்ஸ், குணசேகர், மாவட்டப் பொருளாளர் தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி