உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணை குட்டை அமைக்க மானியம் வேளாண் பொறியியல் துறை அழைப்பு

பண்ணை குட்டை அமைக்க மானியம் வேளாண் பொறியியல் துறை அழைப்பு

சூலுார்;வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நிவேதா கூறியதாவது:வேளாண் பொறியியல் துறை சார்பில், 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்பில், 15 மீ., முதல், 30 மீ., நீளம் வரை சதுர வடிவில், 2 மீ., ஆழமுள்ள பண்ணை குட்டை அமைத்து தரப்படும்.பண்ணை குட்டையின் கரைகளில் நடவு செய்ய மரக்கன்றுகளும் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகளின் விளை நிலத்தில், பொறியியல் துறை வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்து, பண்ணை குட்டை அமைக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்வர். அதன் பின் பணிகள் துவக்கப்படும். சிட்டா, அடங்கல், ஆதார் நகல், நிலத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சூலுார் வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை