உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார அலுவலகம் முன் சுகாதாரமில்லை: குப்பை குவிப்பதால் அதிருப்தி

சுகாதார அலுவலகம் முன் சுகாதாரமில்லை: குப்பை குவிப்பதால் அதிருப்தி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன்பாக, தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், தனியார் மற்றும் நகராட்சி வாயிலாக சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும் வகையில் இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.இந்நிலையில், நாச்சிமுத்து வீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன்பாக, சுகாதாரம் என்ன விலை என கேட்கும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நாச்சிமுத்து வீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே, குப்பைகள் அதிகளவு குவிந்து கிடக்கின்றன. மூட்டை கட்டி தரம் பிரித்து முறையாக பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், குப்பைகளை இங்கு வீசிச் செல்கின்றனர்.மேலும், தெருநாய்கள், கால்நடைகள், இக்கழிவுகளை உட்கொள்வதால் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் விழுவதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை