மேலும் செய்திகள்
கல்வியோடு விளையாட்டு, கலைகளுக்கும் ஊக்கம்
18-Aug-2024
கோவை;படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்துவதுடன், சிறப்பு தேர்வுகளை நடத்தி மாணவர்களை மேம்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு, நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை, 114 அரசு பள்ளிகளை சேர்ந்த, 8,232 மாணவர்கள் தேர்வு எழுதினர்; இதில், 7,685 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதேபோல், பிளஸ்1 பொது தேர்வை, 35 ஆயிரத்து, 628 பேர் எழுதினர்.இவர்களில், 15 ஆயிரத்து, 346 மாணவர்கள், 18 ஆயிரத்து, 664 மாணவியர் என, 34 ஆயிரத்து, 210 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் விதமாக, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தமிழ், ஆங்கிலம், இயற்பியல் என, பாடவாரியாக முதுகலை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பேசுகையில், ''பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் வருகையை, உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 'தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். வாரத்துக்கு மூன்று சிறப்பு தேர்வுகளை நடத்தி, மாணவர்கள் முன்னேற்றம் குறித்த கோப்புகளை சேகரித்து வைக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
18-Aug-2024