உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு மெஷினை இரவில் சரி பார்க்காதீர்! தேர்தல் அலுவலர்கள் உத்தரவு

ஓட்டுப்பதிவு மெஷினை இரவில் சரி பார்க்காதீர்! தேர்தல் அலுவலர்கள் உத்தரவு

பொள்ளாச்சி : ஓட்டுப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் இரவு, மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்களின் செயல்பாடுகளை சரிபார்க்கக் கூடாது என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.லோக்சபா தேர்தல் நாளை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது. அவ்வகையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.ஓட்டுச்சாவடிகளில், ஆசிரியர்கள் பி.ஓ., (பூத் அதிகாரி) மற்றும் பி.ஓ.,1 முதல் பி.ஓ., 4 வரையான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, ஓட்டுப்பதிவு குறித்து மூன்று கட்டங்களாக மண்டல தேர்தல் அலுவலர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.இந்நிலையில், இன்று (18ம் தேதி) பயிற்சி பெற்ற சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மையங்களுக்கு நேரடியாகச் சென்று, பணி ஒதுக்கீடு உத்தரவு பெறவுள்ளனர்.தவிர, அவரவர் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடிக்குச் சென்று, முன்னேற்பாடுகளை கவனிக்க உள்ளனர். அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, ஓட்டுப்பதிவுக்கு பேலட் யூனிட், விவிபேட், கன்ட்ரோல் யூனிட் ஆகியவை கொண்டுசெல்லப்படவும் உள்ளது.இந்நிலையில், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய இரவு, மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்களின் செயல்பாடுகளை சரிபார்க்கக் கூடாது என, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக, தேர்தலின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்களின் செயல்பாடுகள், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு சரிபார்க்கப்பட்டு, மீண்டும் காலையில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, 'கிளியர்' பட்டனை அழுத்திய பின், 'சீல்' வைக்கப்படும்.இந்த தேர்தலில், காலை, 5:45 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் முகவர்கள், 6:00 மணி கடந்தே ஓட்டுச்சாவடிக்கு வருகை புரிவர்.தவிர, கட்சி வேட்பாளர் நியமித்த முகவர் வராமல் சப்-முகவர் வருகை புரிந்தால், அவர்களின் விபரத்தை முழுமையாக கேட்டறிந்த பின்னரே, ஓட்டுச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர்.அவர்களுக்கு ஒப்புதல் கடிதம், பேட்ஜ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும் என்பதால், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ