உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையின் பிடியில் சிக்காதீர்: எஸ்.பி.,

போதையின் பிடியில் சிக்காதீர்: எஸ்.பி.,

சூலுார்; போதையின் பிடியில் சிக்கினால் வாழக்கை முழுவதும் நாசமாகி விடும், என, எஸ்.பி., கார்த்திகேயன் பேசினார்.நீலம்பூர் கதிர் கலை அறிவியல் கல்லுாரியில் 'போதையில்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கற்பகம் வரவேற்றார். 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பங்கேற்று பேசுகையில், திரைப்படங்களில் காட்டுவது போல், நிஜ வாழ்க்கை இருக்காது. தீய வழிகளில் சென்று மீண்டும் திருந்துவது போல் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், நடைமுறையில் போதையின் பாதையில் சென்றால், ஏராளமான பிரச்னைகள் உண்டாகும்.கல்லுாரி முடிந்து சென்ற பிறகும் பிரச்னைகளில் இருந்து மீள முடியாது. அதனால், எந்த வகையிலும் போதைக்கு அடிமையாகாதீர், என்றார். போதைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில்,கோவை மாவடத்தில் போதை பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாணவர்கள் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ