உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாக்டர் முத்துாஸ் மருத்துவ குழுமம் சார்பில் வாக்கத்தான்

டாக்டர் முத்துாஸ் மருத்துவ குழுமம் சார்பில் வாக்கத்தான்

கோவை;உலக அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு, கோவை டாக்டர் முத்துாஸ் மருத்துவ குழுமம் சார்பில், வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.உலகம் முழுவதும் கடந்த 27ம் தேதி, உலக அவசர சிகிச்சை தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கோவை டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை குழுமம் சார்பில், அவசர சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.சரவணம்பட்டியில் உள்ள முத்துாஸ் மருத்துவமனை முன் துவங்கிய வாக்கத்தானை, டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமார், நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரேமா, இணை இயக்குனர் செல்வகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அப்போது டாக்டர் முத்து சரவணகுமார் பேசுகையில், “மூன்று நாட்கள் உலக அவசர சிகிச்சை தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பி.எல்.எஸ்., எனப்படும் அடிப்படை உயிர் காக்கும் சிகிச்சைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் விளக்க நிகழ்ச்சி, நாளை(இன்று) நடைபெற உள்ளது,” என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் இனியவன், டாக்டர் செந்தில் பிரகாஷ், டாக்டர் சாஜிதா, டாக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை