உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி

புதிய மின் இணைப்பு வழங்குவதில் இழுபறி

உடுமலை, : உடுமலையில் மின் மீட்டர் தட்டுப்பாடு காரணமாக, புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், வீடுகள், கடைகள் என கட்டுமான பணிகளுக்காக தற்காலிக மின் இணைப்பு கோரி, நுாற்றுக்கணக்கானவர்கள் ஆன்லைன் வாயிலாக, பதிவு செய்து, இரு மாதமாக காத்திருக்கின்றனர்.அதே போல், புதிய மின் இணைப்பு கோரியும், மின் மீட்டர்கள் மாற்றம், விவசாய மின் இணைப்பு என, பலர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.ஆனால், மின் மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் இழுபறியாகி வருகிறது.எனவே, உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு தேவையான, மின் மீட்டர்கள் ஒதுக்கீடு செய்து, உடனடியாக பதிவு செய்த அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை