உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ - நாம் திட்டம் விழிப்புணர்வு

இ - நாம் திட்டம் விழிப்புணர்வு

கிணத்துக்கடவு;இ-- நாம் திட்டம் குறித்து, நெகமம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, நெகமத்தை சுற்றியுள்ள கள்ளிப்பட்டி, என்.சந்திராபுரம், குரும்பபாளையம், வெள்ளாளபாளையம், ஆவலப்பம்பட்டி, மூலனூர், சின்ன நெகமம், ராசக்காபாளையம் போன்ற கிராமங்களில், 300கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இ - நாம் திட்டம், சோலார் உலர் களம், சேமிப்பு கிடங்கு வசதி, பொருளீட்டு கடன் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், பண்ணை வாயில் முறையில் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தில், விற்பனை செய்து பயன் பெற தெரிவிக்கப்பட்டது.தற்போது விற்பனை கூடத்தில், 5 ஆயிரத்து 117 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில், 317 விவசாயிகள், 979.146 மெட்ரிக் டன் அளவுக்கு விலை பொருட்களை, 1.90 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்துள்ளனர்.எனவே, விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தில் விற்று பயன் பெற, நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தங்கள் ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் போன்ற ஆவணங்களின் நகல்களை கொண்டு இதில், பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக பல விவசாயிகள் பயன் பெறுவார்கள்.இத்தகவலை, நெகமம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை