உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.சி.வி.,சிசு வித்யோதயாவில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு

வி.சி.வி.,சிசு வித்யோதயாவில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு

கோவை;ரேஸ்கோர்ஸ், வி.சி.வி.சிசு வித்யோதயா பள்ளியில், மாணவர் தலைவர் மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.கோவை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போதைப்பொருளின் தீமைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து, மாணவர்களிடம் பேசினார். மாணவர் தலைவர் மற்றும் விளையாட்டுக்குழு தலைவராக பதவியேற்றுக் கொண்ட மாணவர்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பள்ளியின் தலைவர் நவீன் மன்றாடியார், தாளாளர் மனோ, செயலாளர் பல்லவி, துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை