உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பஸ் மோதி முதியவர் இறந்தார்.துடியலுார் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பிரிவில் வசித்தவர் கிருஷ்ணசாமி, 71. இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணசாமி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ