| ADDED : ஜூன் 03, 2024 11:38 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பகவதிபாளையம் - நெ.10 முத்தூர் செல்லும் ரோட்டில், மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது.கிணத்துக்கடவு, பகவதிபாளையம் - நெ.10 முத்தூர் செல்லும் ரோட்டில், ஏராளமானோர் பயணிக்கின்றனர். இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளது. இங்கு உள்ள தனியார் லே-அவுட்டில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.இந்த ரோட்டில், தனியார் கம்பனி அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த மின் கம்பம் சேதம் அடைந்து கீழே சாய்வதற்கு முன், மாற்றியமைக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த சில நாட்களுக்கு முன், சேதம் அடைந்த மின் மின்கம்பத்தின் அருகாமையில் இருந்த கம்பம் சாய்ந்து மின் ஒயர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.