உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஞாயிற்றுக்கிழமையில் மாணவர் சேர்க்கை பெற்றோர் ஆர்வமாக பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமையில் மாணவர் சேர்க்கை பெற்றோர் ஆர்வமாக பங்கேற்பு

ஆனைமலை:ஆனைமலை அருகே, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பெற்றோரின் வசதிக்காக சமுதாய கூடத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார் பகுதியைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளியில் சேர்க்கும் வகையில் நேரடியாக பெற்றோரை சந்தித்து, சமுதாய கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது. தமிழாசிரியர் பாலமுருகன், பெற்றோரை தேடி சென்று மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகிறார்.தமிழாசிரியர் கூறியதாவது:கிராமங்களில் வசிப்போர் மாணவர்களை சேர்க்க எந்த ஆவணங்களை கொண்டு வர வேண்டும் எனக்கேட்டு, ஜெராக்ஸ் எடுத்துவரச் செல்வதால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. மேலும், கிராமங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர், மாலை நேரங்களில், மாணவர் சேர்க்கை நடத்த முடியுமா என கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையில் பெற்றோர்களின் வசதிக்காக மாலை நேரத்தில் மாணவர் சேர்க்கை, பெத்தநாயக்கனுார் சமுதாய கூடத்தில் நடத்தப்பட்டது. அதில், சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார் கிராமங்களை சேர்ந்த பெற்றோர் பங்கேற்று ஆர்வமாக தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில், மாலை, 3:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை மாணவர் சேர்க்கை நடந்தது. மொத்தம், 19 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப, இதுபோன்று பெற்றோரை தேடிச் சென்று நேரடி சேர்க்கை நடத்தப்படும்.இந்த முயற்சிக்கு, ஊராட்சி நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர்.மேலும், வெளியூரில் இருந்தும் அதிகளவு மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்கின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, ஆறு மாணவர்கள் (பெத்தநாயக்கனுார் - 3, சோமந்துறை சித்துார் - 2, ஆனைமலை - 1) சேர்ந்துள்ளனர். பள்ளியில் அதிகளவு மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை