உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரத்தை உறுதி செய்து உணவு அளியுங்கள்! பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

தரத்தை உறுதி செய்து உணவு அளியுங்கள்! பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

பொள்ளாச்சி : அங்கன்வாடி உதவியாளர் மற்றும் பணியாளர்கள், உணவின் தரத்தை உறுதி செய்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அருகே, கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட ஆறு குழந்தைகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள், குழந்தைகளை பரிசோதித்து, நான்கு மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், அனைவரும் உடல்நலம் தேறினர்.இதையடுத்து, குழந்தைள் அனைவரும் பெற்றோர்களுடன், வாகனங்கள் வாயிலாக, அவரவர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, கொல்லம்பட்டியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி, அருகிலுள்ள பள்ளி அறைக்கு மாற்றப்பட்டது. அங்கன்வாடி (பொறுப்பு) பணியாளர், வேறு அங்கன்வாடி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.மேலும், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 259 அங்கன்வாடிகளில் உள்ள உதவியாளர் மற்றும் பணியாளர்கள், உணவின் தரத்தை உறுதி செய்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:நாள்தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை, ஊட்டச்சத்துடன் சுகாதாரமான முறையில் தயாரிக்க அங்கன்வாடி உதவியாளர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வபோது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, குடிநீர் உள்ளிட்டவை தரமாக வழங்கப்படுகிறதா, உரிய காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.இதேபோல, சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரங்கள் முறையாக கழுவி பராமரிக்கப்படுவதும் கண்டறியப்படுகிறது. இது தொடர்பாக, கூட்டம் நடத்தி உதவியாளர் மற்றும் பணியாளர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ