உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் உரிமைத்தொகை தி.மு.க.,காரர்களுக்கு கிடைக்கல ஊழியர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்

மகளிர் உரிமைத்தொகை தி.மு.க.,காரர்களுக்கு கிடைக்கல ஊழியர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்

அன்னுார் : 'கட்சிக்காரர்களுக்கு எந்த நலத்திட்டத்திலும் பயனில்லை,' என தி.மு.க., ஊழியர் கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது. அன்னுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று அன்னுாரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட செயலாளர் ரவி பேச துவங்கியதும், நிர்வாகிகள் சிலர் எழுந்து, மகளிர் உரிமைத்தொகை தி.மு.க.,வினருக்கு கிடைக்கவில்லை. அ.தி.மு.க.,வினர் தான் பயன்பெற்றுள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு என எதிலும் நம் கிளை நிர்வாகிகளுக்கு பயனில்லை. ஒரு சிலர் மட்டுமே பயனை அனுபவிக்கின்றனர்,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. புகார் கூறியோரை சிலர் அமைதிப்படுத்தினர்.மாவட்ட செயலாளர் ரவி பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தையே பார்க்காத அடிமட்ட தொண்டனையும் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காகத்தான் வந்துள்ளேன். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத கிளை நிர்வாகிகள், தங்கள் பெயர்களை ஒன்றியச் செயலாளரிடம் தர வேண்டும்.தற்போது பெரும்பாலான ஊராட்சிகளில் அ.தி.மு.க., தலைவர்கள் உள்ளனர். எனவே வீடு, பட்டா ஆகியவற்றை தங்கள் கட்சியினருக்கு வழங்குகின்றனர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மீண்டும் அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், இப்போதைக்கு தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. உங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை