உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

கோவை : கோவை மாநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமம் பெற செப்., 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :தீபாவளி பண்டிகை வரும், அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் வியாபாரிகள், மாநகர போலீசில் உரிமம் பெற வேண்டும். கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க, ஆக,. 21 (நேற்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கால அவகாசம் செப்., 5ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ