உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு

பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு

பொள்ளாச்சி;பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்த்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நாட்டுக்கோழிகளை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் அரிசி, குருணை, எஞ்சிய தீவனப் பொருட்கள் நாட்டுக்கோழிகளுக்கு வழங்கப்படுகின்றன.இதன் வாயிலாக, கிராமப்புற பெண்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கால்நடைத்துறையினர் கூறுகையில், 'சந்தையில் எப்போதும் அதிக விலையுள்ள நாட்டுக்கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டைகள், அதிக லாபம் ஈட்டித் தருகிறது. ஒரு சென்ட் பரப்பளவில், 200 கோழிகள் வளர்க்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ