உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் அலுவலகத்தில் தில்லாக கள் குடித்து விவசாயிகள் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் தில்லாக கள் குடித்து விவசாயிகள் போராட்டம்

கோவை:கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்த, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈடுபட்டனர்.திடீரென கைகளில் வைத்திருந்த கள்ளை குடித்தனர். இதனால் போலீசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.விவசாயிகள் கூறியதாவது:தமிழகத்தில் கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கள் என்பது உணவு. பருகினால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது, உணவின் ஒரு பகுதி. அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளுக்கு அனுமதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் இல்லை. எனவே கள் இறக்க அனுமதி கிடைக்கும் வரை, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் கள் இறக்கி கேரளாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் துவங்கி விட்டன. கள் உணவுப் பட்டியலில் இருப்பதால், யாரும் தடை விதிக்க முடியாது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கள் இறக்குவோம். கைது செய்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை