உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கதளி வாழை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

கதளி வாழை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம், ; கதளி ஒரு கிலோ, 68 ரூபாய் வரை விற்பனை ஆனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை நால் ரோட்டில் தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த ஏலத்துக்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 3000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அனைத்து வாழைத்தார்களின் விலை சற்று உயர்ந்து ஏலம் போனது.வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் கூறியதாவது: ஏல மையத்தில் ஒரு கிலோ கதளி, குறைந்தபட்சம், 25 ரூபாய்க்கும், அதிகபட்சம், 68 ரூபாய்க்கும், நேந்திரன் கிலோ குறைந்த பட்சம், 20க்கும், அதிகபட்சம், 45 ரூபாய்க்கும், விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 250, அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 300க்கும், அதிகபட்சமாக, 1,500, தேன் வாழை குறைந்த பட்சம், 250க்கும், அதிகபட்சம், 800க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 400, மொந்தன் குறைந்தபட்சம், 150 அதிகபட்சம், 350 ரூபாய்க்கு ஏலம் போனது.இந்த வாரம் அனைத்து வாழைத்தார்கள், 10 லிருந்து 20 ரூபாய் வரை, விலை உயர்ந்து விற்பனையானது.இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ