மேலும் செய்திகள்
வாழைத்தார் வரத்து சரிவு விலை அதிகரிப்பு
31-Jan-2025
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ள நிலையில், செவ்வாழை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.தினசரி மார்கெட்டில், நேற்று செவ்வாழை (ஒரு கிலோ) --- 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேந்திரன் கிலோ - - 40, ரஸ்தாளி --- 45, பூவன் --- 30, கதளி --- 35, சாம்பிராணி வகை --- 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை கிலோ -- 20, ரஸ்தாளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் மற்றும் பூவன் --- 15, கதளி --- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது, சென்ற வாரத்தை விட, வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு சில ரக வாழைத்தார்கள் விலையும் அதிகரித்துள்ளது. வியாபாரிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால், வாழைத்தார் விரைவாக விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,' என்றனர்.
31-Jan-2025