உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாமரங்களில் விளைச்சலை எதிர்நோக்கும் விவசாயிகள்

மாமரங்களில் விளைச்சலை எதிர்நோக்கும் விவசாயிகள்

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள மாந்தோப்புகளில், பூ உதிர்வதை தடுக்க, மருந்து தெளித்தல் உட்பட பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால், அதிகப்படியான இடங்களில், மா விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், மானாவாரி மற்றும் கிணற்றுப்பாசனத்தில், சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தியும், செந்துாரம், பங்கனப்பள்ளி, கல்மாரி, மல்கோவா உள்ளிட்ட பல ரகங்கள், சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது, மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால், விவசாயிகள், மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். அதேநேரம், பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், விளைச்சலும் அதிகரிக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:மாங்கன்றுகள் நட்டு, 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்ச நிலையில் இருக்கும். இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன், இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக, அனுப்பப்படுகிறது.அவ்வப்போது இலைகள் கருகுவது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் காணப்படுகிறது. எனவே, மருந்து தெளித்து, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துழைத்தால், தற்போது பிடித்துள்ள பூக்களால், விளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை