உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள் இறக்க அனுமதிக்க விவசாயிகள் மனு

கள் இறக்க அனுமதிக்க விவசாயிகள் மனு

சூலுார்;'கள்ளச்சாராயத்தை ஒழிக்க, கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள், சூலுார் தாசில்தார் தனசேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 'கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்ததை காரணமாக கூறி, கள் இறக்கும் விவசாயிகளை போலீசார் அச்சுறுத்த கூடாது' என, கூறப்பட்டிருந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறுகையில், ''கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்துக்கு பின், கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். கள் ஒரு போதை பொருள் இல்லை. அதனால், கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை