உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவை;அதிக அளவில் நிலங்களில் பயிர் சேதம் ஏற்படுத்தும், காட்டுப்பன்றி களை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் தலைவர் பழனிசாமி, கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மலைகள் மற்றும் வனப்பகுதியின் ஓரத்தில் பட்டா மற்றும் அரசின் புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.இந்த நிலங்களில் காட்டுப்பன்றி, மயில், யானை, குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகளால் பயிர்சேதம், உயிர்சேதம் மற்றும் வீடு சேதம் நடக்கிறது.வனத்தின் ஓரமாக வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் நெல், வாழை, தென்னை, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு, தமிழக அரசு தற்பொழுது வழங்கிடும் இழப்பீடு போதுமானதாக இல்லை.இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். நிலங்களில் பயிர் சேதம் ஏற்படுத்தும் காட்டுப் கட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி