குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி
சூலுார், ; கடந்த சில மாதங்களுக்கு முன், சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக் குளக்கரையில் விளையாடிய மதியழகன் நகரை சேர்ந்த மூன்று சிறுவர்கள், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு கிடைத்தது. நிவாரண நிதிக்கான காசோலைகளை, குடும்பத்தினரிடம் கலெக்டர் பவன் குமார் வழங்கினார். சூலுார் பேரூராட்சி தலைவர் தேவி உடன் இருந்தார்.