உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடையில் பொங்கும் நுரை; பவானியில் கலக்குது கழிவுநீர்

ஓடையில் பொங்கும் நுரை; பவானியில் கலக்குது கழிவுநீர்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே காளட்டியூர் பகுதியில் உள்ள ஏழு எருமை பள்ளத்திற்கு செல்லும் ஓடையில், தொடர்ந்து பல மாதங்களாக கழிவு நீர் நுரை பொங்கி செல்கிறது. இத்தண்ணீர் பவானி ஆற்றில் கலப்பதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கூடலுார் கவுண்டம்பாளையம் பகுதியில் உருவாகும் ஓடை, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி வழியாக சென்று, மத்தம்பாளையம் குட்டை, சிக்காரம்பாளையம், காளட்டியூர், பெள்ளாதி, பெள்ளேபாளையம், இலுப்பந்தம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சிறுமுகை அருகே பகத்துாரில் ஏழு எருமை பள்ளம் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது.இந்த ஓடையில் மழை பெய்யும் போது மட்டுமே தண்ணீர் ஓரளவு மாசு இல்லாமல் செல்கிறது. பிற நாட்களில் உள்ளாட்சி அமைப்புகளின் வீடுகளின் கழிவுநீர், தொழில்நிறுவனங்களின் கழிவு நீர் தான் செல்கிறது. இதனால் ஓடையில் தண்ணீர் கருப்பு நிறத்திலும், பல மாதங்களாக தொடர்ந்து நுரை பொங்கியும் செல்கிறது. முற்றிலும் மாசடைந்த ஓடை நீர், பவானி ஆற்றில் கலப்பதால் மாசடைந்து விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''ஓடையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்,''என்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை